கருணாகரத் தொண்டைமான் குலோத்துங்க சோழனது படைத்தலைவன் .தொண்டை நாட்டை ஆண்டு வந்த அரசர் குல மரபினன். கரிகாலனை யடுத்துத் தொண்டைமான் இளந்திரையன் என்ற மன்னன் காஞ்சியிலிருந்து ஆட்சி புரிந்தோனாவன். இவன் பல்லவத் தொண்டைமான் குலத்தைச் சேர்ந்தவன். பல்லவ தொண்டைமான் குலம் என்பது வன்னியர் குலத்தையே குறிப்பது.இவன் குல மரபினர் காஞ்சீபுரத்தைத் தலைநகராகக் கொண்டு தொண்டை நாட்டை அரசாண்டு வந்தனர்.
கம்பர் சிலை எழுபதில் கூட , தொண்டைமான் பட்டம் பெற்ற கருணாகரனை வன்னியர் குல வேந்தன் என்றும் சம்பு குலத்தவன் என்றுதான் அழைத்து இருக்கிறார் .
கலிங்கப் போர் வெற்றிக்குப் பிறகு, சோழருக்கு அடங்கிய சிற்றரசனாக பல்லவநாட்டை ஆண்ட, முதற் குலோத்துங்க சோழனுடைய தளபதி (கி.பி. 1070-1118) கருணாகரத் தொண்டைமானின் குலமாகிய வன்னியர் பெருமையை பற்றி கம்பர்பாடியது இந்நூல்.
இதற்குப் பரிசாக தங்கப் பல்லக்கு, அணிகலன்கள் மற்றும்ஒரு செய்யுளுக்கு ஆயிரம் பொன் வீதம் பரிசும் கம்பருக்கு வழங்கப்பட்டதாக அறியப்படுகிறது.
சிலையெழுபது எனும் நூல் மூவேந்தர் ஆட்சிக்குப் பின் தோன்றிய நூல்அல்ல. சிலை எழுபது கி.பி.12 ஆம் நூற்றாண்டைச் சார்ந்தது. சோழர்ஆட்சியின்போது எழுதப்பெற்றது இந்நூல்.
இந்நூல் வன்னியர் குலத்தினராகக்குறிப்பிடுவது பள்ளி இனத்தவரையே. இந் நூலில் வன்னியர் பள்ளி நாட்டார்,வீர பண்ணாடர் என்றும் தழலிடை அவதரித்தோர் என்றும்குறிப்பிடப்படுகின்றனர்.மேலும் சம்பு முனிவர் யாகத்தில் தோன்றியவர் வன்னியர் என்றும் கூறப்பட்டுள்ளது.
கருணாகர தொண்டைமான் வன்னியர் குலம் என கம்பர் பாடிய பாடல் பின்வருமாறு :
சம்புகோத்திரச் சிறப்பு
சாத்திர மறைகள் சொற்ற தனிநியமம்வ ழாதோர்
சூத்திரந் தவறில்வன்னி தோன்றுமெய்ப் புகழ்காப் பாளர்
மாத்திரை யளவுஞான மறைப்பின்மா தவங்கூர் சம்பு
கோத்திர வரசர்க் கொப்புக் கூறுவதெவரை மாதோ. 4
வன்னியர் குலச் சிறப்பு
விதிகுலத்தோர் சிறப்புறச்செய் வேள்விக்குச் சிறந்தவன்னி
உதிகுலத்தோ ராதலினா லுயர்குலத்தோ ராமிவர்க்கத்
துதிகுலத்தோ ரொவ்வாரேற் சொலும்வணிக குலத்தோரும்
நதிகுலத்தோர் களுமெங்ஙன் நாட்டினிலொப் பாவாரே. 6
வன்னியர் குலச் சிறப்பு
மறைக்குலத்தி லுதித்தாலென் மறையுணர்ந்தா லென்வணிகர்
நிறைக்குலத்தி லுதித்தாலென் நிதிபடைத்தா லென்னான்காம்
முறைக்குலத்தி லுதித்தாலென் முயற்சிசெய்தா லென்வன்னி
இறைக்குலத்தி லுதித்தவரே இகபரனென் றியம்புவரே. 7
--------------------------------------------- சிலை எழுபது
சோழர்கள் வழியில் வந்தோரே பல்லவர் என்றும் சிலர் கருதுகின்றனர்.தொண்டைமான் என்னும் பெயர் தொண்டைக் கொடிபற்றி வந்ததென்று கூறப்படுதலாயினும், பல்லவம் என்பதற்குத் தளிரென்பது பொருளாகலானும் இவ்விரு பெயரும் ஒருவரைக் குறிக்கும். பல்லவர் இளந்திரையனுக்குச் சில தலைமுறை பின் வந்தோரே சிலர் ஆந்திர நாட்டிலும், சிலர் காஞ்சியிலுமாக இருந்து பல்லவர் என்னும் பெயருடன்ஆட்சி புரிந்தோராதல் வேண்டும்,தொண்டை நாட்டுக்குப் பல்லவ என்பது ஒரு பெயர், அதுபற்றியே தொண்டையர், பல்லவரெனப்பட்டனர். இப்பெயரக்ளும், பல்லவர்க்கு வழங்கும் காடவர், காடுவெட்டி என்னும் பெயர்களும், அந்நாடு முன்பு காடடர்ந்ததாய் இருந்திருக்கவேண்டு மென்று கருதச் செய்கின்றன. தொண்டையர் அல்லது தொண்டைமான் என்னும் பெரும், பல்லவர் என்னும் பெயரும், ஒருவகுப்பினரையே குறிப்பன. இவை அனைத்தும் வன்னியர்கள் தம் உயிர்க்கு இணையாக பாதுகாக்கும் பட்டங்கள் .
சோழர் ஆட்சியில் தொண்டைமான்
கருணாகரத் தொண்டைமான்
பன்னிரண்டாம் நூற்றாண்டில் செயங்கொண்டாரால் பாடப்பட்டது கலிங்கத்துப் பரணி. , கலிங்க நாட்டு அரசன் அனந்தவன்மனை வெற்றி கொண்ட போர்தான் கலிங்கப்போர். இன்றைய ஒரிஸ்ஸாவின் கீழ்ப்பகுதிதான் கலிங்க நாடாக விளங்கியது. பரணி என்றால் போரில் ஆயிரம் யானைகளைக் கொன்ற வீரனைப் பாடும் பாடல் என்று பொருள்.கருணாகர தொண்டைமான் என்ற தளபதியைக் கொண்டு முதல் குலோத்துங்க சோழன் அனந்தவன்மனை வென்ற கலிங்கப் போரைப் பற்றியதே கலிங்கத்துப் பரணி. இவன் தொண்டை நாட்டை ஆண்டு வந்த பல்லவ அரசன் ஆவான். பல்லவப் பெரு மன்னனான குலோத்துங்கனுக்கு உட்பட்ட சிற்றரசர்களில் ஒருவனாய் நெருங்கிய நண்பனாகவும் இருந்திருக்கிறான். இந் நட்பு காரணமாகவே குலோத்துங்கன் காஞ்சியில் வந்து படைகளுடன் தங்கினான் என்பர். கருணாகரன் கலிங்கப் போருக்குப் படைத்தலைவனாய்ப் புறப்படும் போது, இவனுடைய தமையனும் குலோத்துங்க சோழனின் நன்பனுமாகிய பல்லவனும் உடன் சென்றான் எனக் குறிக்கப்படுகிறது.
"தொண்டையர்க் கரசு முன்வ ருஞ்சுரவி
துங்க வெள்விடை உயர்த்த கோன்
வண்டையர்க்கரசு பல்லவர்க்கரசு
மால் களிற்றின் மிசை கொள்ளவே" -- (பாடல். 364)
என்ற பாடலால் இதை அறியலாம். தமையன் தொண்டை நாட்டை ஆள, குலோத்துங்கனுக்குப் படைத் தலைவனாய் அமைந்த கருணாகரன், வண்டைநகரின் கண் இருந்த பகுதியை ஆட்சி செய்தான் என அறியலாம். இவன் வண்டையர்க்கரசு என்றே பல இடங்களில் குறிப்பிடப்படுகிறான். வண்டை நகர் அக்காலத் தொண்டை நாட்டில் சிறந்திருந்த நகரங்களில் ஒன்று. இக்காலத்தில் சென்னைக்கு அருகில் உள்ள வண்டலூர் வண்டை நகராக இருக்கலாம் எனக் கூறுகின்றனர். அக்காலத்தில் வண்டைநகர், மல்லை (மாமல்ல புரம்), காஞ்சி,மயிலை (மயிலாப்பூர்) என்பன சிறந்த பட்டினங்கள் எனவும் அவை அடங்கிய நாடே தொண்டை நாடு என்பதும் கீழ்வரும் பரணி பாடலால் அறியலாம்.
என்ற பாடலால் இதை அறியலாம். தமையன் தொண்டை நாட்டை ஆள, குலோத்துங்கனுக்குப் படைத் தலைவனாய் அமைந்த கருணாகரன், வண்டைநகரின் கண் இருந்த பகுதியை ஆட்சி செய்தான் என அறியலாம். இவன் வண்டையர்க்கரசு என்றே பல இடங்களில் குறிப்பிடப்படுகிறான். வண்டை நகர் அக்காலத் தொண்டை நாட்டில் சிறந்திருந்த நகரங்களில் ஒன்று. இக்காலத்தில் சென்னைக்கு அருகில் உள்ள வண்டலூர் வண்டை நகராக இருக்கலாம் எனக் கூறுகின்றனர். அக்காலத்தில் வண்டைநகர், மல்லை (மாமல்ல புரம்), காஞ்சி,மயிலை (மயிலாப்பூர்) என்பன சிறந்த பட்டினங்கள் எனவும் அவை அடங்கிய நாடே தொண்டை நாடு என்பதும் கீழ்வரும் பரணி பாடலால் அறியலாம்.
" வண்டை வளம் பதி பாடீரே மல்லையும் கச்சியும் பாடீரே
பண்டை மயிலையும் பாடீரே பல்லவர் தோன்றலைப் பாடீரே" - பாடல் . 534
கருணாகரன் வன்னியர் குலம் என்று பாடிய கம்பர் , வன்னியரான கருணாகரன் கையில் எடுத்த வில்லை பற்றியும் பாடியுள்ளார்.
வன்னியர் ஏந்திய வில்லே, வில்
மலையினிற் பொலங்கொண் மேரு மலையன்றி
மலைமற் றுண்டோ
கலையினி லுரைப்ப வெண்ணெண் கலையன்றிக்
கலைமற் றுண்டோ
அலையினி லுகாந்த நீத்தத் தலையன்றி
யலைமற் றுண்டோ
சிலையினிற் றிறங்கூர் வனியர் சிலையன்றிச்
சிலைமற் றுண்டோ ? 3
வன்னியரின் புகழ்
ஆந்துணையாம் வன்னியர்போ லார்துணைப்பட் டாதரிப்பார்
போந்தரிகள் வணங்குமிவர் புகழ்சிறிதோ யாம்புகழ்தற்
கேந்துகர மிரண்டினும்பொன் னிலக்கமறச் சொரியினுமிவ்
வேந்தர்புகழ்க் கிணைநாவால் வேறுபுகழ் கூறேமால். 49
குலத்தலைவர் படைச் சிறப்பு
விடையுடையார் வரமுடையார்
வேந்தர்கோ வெனலுடையார்
நடையுடையார் மிடியுடைய
நாவலர்மாட் டருள்கொடையார்
குடையுடையார் மலையன்னர்
குன்றவர்பல் லவர்மும்முப்
படையுடையார் வனியர்பிற
ரென்னுடையார் பகரீரே. 8
சிலை எழுபது வன்னியரை மலையமன்னரெனவும் பல்லவரெனவும் வருணிப்பதுகவனித்தற்பாலது. சோழப்பெருமன்னர் காலத்திலே தொண்டைமண்டலத்திலாண்டகிழியூர் மலையமான்களையும் பல்லவமரபில் வந்த காடவ அரசர்களையுமே நூல் இவ்வாறு குறிப்பிடுகின்றது. இக்குறுநில மன்னர் வன்னியரா யிருந்தமைக்குக்கல்வெட்டுச் சான்றுகள் ஆதாரமாயுள்ளன.
பரிசுதரற் சிறப்பு
அவிக்கா தரங்கூர் புனிதர்மகிழ்ந்
தருள்வன் னியரை யாம்புகழ்ச்
செவிக்கா ரமுதமெனக் கேட்டுச்
சிந்தையுவந்து சீர்தூக்கிப்
புவிக்கா யிரம்பொ னிறைநீக்கிப்
பொற்றண் டிகபூடணத்தோடு
கவிக்கா யிரம்பொன் பரிசளித்தான்
கருணாகரத்தொண்டை வன்னியனே. 68
அறந்தாங்கி தொண்டைமான்
அறந்தாங்கி தொண்டைமான் மரபு புதுக்கோட்டை மரபுக்கு 300 ஆண்டுகள் முந்தையது. அறந்தாங்கி தொண்டைமான் பெயர் பொறித்த 50 கல்வெட்டுக்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. அறந்தாங்கியில் அரசு செலுத்திய தொண்டைமான்களுக்கும், 17ம் நூற்றாண்டில் புதுக்கோட்டையில் இருந்த தொண்டைமான்களுக்கும் தொடர்பு புலப்படவில்லை.அறந்தாங்கி தொண்டைமான்களைப்பற்றி கி.பி.1426ல் தான் முதலில் தெரிகிறது. பொன்னம்பல நாத தொண்டைமான் (கி.பி.1514—1567) மிகவும் வலிமையும், செல்வாக்கும் முள்ளவனென்று தெரிகிறது. இவன் இலங்கையை ஏழுநாளில் வென்றதாகச் சொல்லப்படுகிறது. பாளையக்காரர் என்போர் வேறு வேறு தகுதியுடைய படைத்தலைவராவர். இவர்களிற் சிலர் பழைய அரசர்களின் வழியினர் அல்லது அமைச்சர் முதலானோரின் வழியினர் என்று சொல்கின்றனர். இவர்களின் முன்னோர் அரசர்களிடமிருந்து, அவர்களது மதிப்பைக் காப்பாற்றியதற்கோ, தாம் புரிந்த நன்றிக்கு மாறாகவோ, பட்டாளத்தை வைத்துக்கொள்ளவோ பெரு நிலங்களை இனாமாகப் பெற்றிருக்கின்றனர்.
இவர்களெல்லாம் உண்மையான பல்லவ மற்றும் சோழ வம்சத்தின் சங்க காலம் தொட்டு வந்தவர்கள் . ஆகவேதான் இவர்களை கம்பர் போன்ற புலவர்கள் பாடலாக இவர்களின் வீரத்தையும், வன்னியர் குலத்தின் பெருமையையும் பாடியுள்ளனர் .
இப்பொழுது புதுக்கோட்டை தொண்டைமான் பற்றி பார்ப்போம் .... அறந்தாங்கி தொண்டைமான் மரபு புதுக்கோட்டை மரபுக்கு 300 ஆண்டுகள் முந்தையது. அறந்தாங்கி தொண்டைமான் பெயர் பொறித்த 50 கல்வெட்டுக்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. அறந்தாங்கியில் அரசு செலுத்திய தொண்டைமான்களுக்கும், 17ம் நூற்றாண்டில் புதுக்கோட்டையில் இருந்த தொண்டைமான்களுக்கும் எந்த தொடர்பும் இல்லை .
ஏனெனில்,அவர்கள் விசயநகரப் பேரரசின் பிரதிநிதிகள்.
பிற்காலத்தில் பல்லவர்கள் அன்னியர்களால் வீழ்ச்சியுற்ற சமயத்தில்,அவர்கள் வன்னியரில் ஐக்கியமாயினர்.16 ஆம் நூற்றாண்டின் பல்லவராயர் மற்றும் தொண்டைமான் என்போர் உண்மையான பல்லவர்குடி கிடையாது.அவர்கள் வடுகர் இனத்தைச் சார்ந்தவர்கள்.வடுகர் உண்மையான பல்லவராய மன்னனைக் கொன்று விட்டு தம்மை பல்லவராயர் என அழைத்துக்கொண்டனர்.இதற்கிடையில் பிற்காலத்தில் புதுக்கோட்டையை ஆட்சி செய்த வடுகர் 'தொண்டைமான்' பட்டத்தை தாங்கி வந்தனர்.
கள்ளர்கள் புதுகொட்டையை தொண்டைமான் பட்டம் கொண்டு ஆண்டது எப்படி ?
=======================

The princely state of Pudukottai was created by Raghunatha Thondaiman.
Raghunatha Kilavan Setupati of Ramnad (1673–1708 A.D.) married Kathali Nachiar the sister of Thondaiman, he appointed his brother in law Raghunatha Thondaiman as a chief of the district of Pudukottai. Raghunatha Thondaiman was earlier ruling Thirumayam. In appreciation of Raghunatha Tondaman's services, Raghunatha Kilavan Setupati has given Pudukkottai as an honour for his services.
In later centuries, the Thondaiman rulers, while nominally feudatories of the Ramnad state, often pursued an independent foreign policy, a trend common in all parts of India at that time. After the death of Raghunatha Kilavan Setupati he become ruler of Pudukottai.
(இதன் பொருட்டே இவர்கள் தனியாக 'கள்ளர் குல தொண்டைமான்' என்றே தமிழக சாதி பட்டியலில் அழைக்கப்படுகிறார்கள்). காரணம் உண்மையான 'தொண்டைமான்' 'பல்லவராயர்' பரம்பரையினருக்கும் அவர்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை.
No comments:
Post a Comment